2012ம் ஆண்டு இடம்பெற்ற தேர்வுப்போட்டிகளில் 1ம் இடத்தை பெற்ற எமது பாடசாலை ஐப்பசி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சவால் கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலேயே Platoon Officer Mr. K.Kuruparan தலைமையில் 22வது படைப்பிரிவின் கீழ் தேசியப் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ்ப்பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எமது Cadet மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகளாவன:
விடுதிப்பராமரிப்பு
இராணுவ அணிநடை மரியாதை
துப்பாக்கிச் சுடுதல்
தடை தாண்டல் போட்டிகள்
பொது அறிவு
முதலுதவி
கலை மற்றும் கலாசாரப் போட்டிகள்
உடல் வலுப் போட்டிகள்
மற்றும் பல போட்டிகள் ஆகும்.
அத்துடன் எமது பாடசாலை Cadets மாணவர் தலைவர் Z1022 Sergeant Sutharsan Sivamohan அவர்கள் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவர்களை சந்தித்து அலரிமாளிகையில் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டமை பாடசாலைச் சமூகத்துக்குமே பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் 2012ம் ஆண்டுக்குரிய பாரிய வளர்ச்சி கண்டு வரும் படையணியாக எமது பாடசாலைப் படையணி தெரிவாகி தேசிய பயிலிளவல் சிறப்பணி பணிப்பாளர் கௌரவ Major General GBW Jeyasundara R.W.P R.S.P அவர்களார் பாராட்டி கிண்ணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த வேளையிலே எமது மாணவர் தலைவரின் தர நிலை உயர்வும் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.