
அதிபரின் எண்ணத்தில் உதித்தவை…
வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் தற்போது 50 ஆண்டுகளைக்கடந்து பொன்விழா நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.இக்காலப்பகுதியில் அதிபராக கடமையாற்றும் நான் கல்லூரியின்இணையத்தளத்திற்கு எனது மன எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில்மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவனான நான் அதிபராககடமையாற்றும் பாக்கியம் இறைவனால் தரப்பட்ட நற்பணியெனகருதுகின்றேன். வவுனியா மாவட்டத்தின் நகரப்பகுதியில் அமைந்துள்ளஇக்கல்லூரி ஆற்றிய பணி காலத்தால் அழியாதது, இதற்கு சான்றாகபலதுறைகளிலும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சிறப்புறமிளிர்வதைக்கண்டு கல்லூரித்தாய் சுக மகிழ்வது மட்டற்ற மகிழ்ச்சியையும்ஊக்கத்தையும் கொடுக்கின்றது. ஒரு சமூகத்தின் கல்விக்கண்ணைத்திறந்து சமுதாயத்தை உன்னத நிலையை அடைய வைப்பது கல்விக்கல்லூரிகளேயாகும். எனவே அதனை பெளதீக மனிதவள ரீதியாக நன்குபராமரித்து செயற்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் பாடவிதான,இணைப்பாடவிதான விடயங்களுடன் ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம்,விழுமியங்களையும் போன்ற பலவற்றுடன் சமூகத்திற்கு சிறந்தநற்பிரஜைகளை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு அதிபரிடமும்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளிடம்விடப்பட்டுள்ளது.எனவே கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தவும் மாணவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யவும்,ஆசிரியர்களின் தங்குமிட வசதிகளைமேம்படுத்தவும் மேற்குறித்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியகட்டாய தேவையுள்ளது. அவ்வாறு இணைந்து செயற்படுவதன் மூலம்பின்வரும் அவசரமான, அத்தியாவசியமான தேவைகளை நிறைவு செய்துகல்லூரித்தாயை மேலும் வலுவுள்ளதாக்க முடியும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற பழைய மாணவர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள், வர்த்தக பெருமக்கள் அனைவரதும்பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.